ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தமிழகத்தில் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்வே: மதுரை எம்பி வரவேற்பு

venkatesan
தமிழகத்தில் 5 முன்பதிவில்லா பொது பெட்டிகள் உடைய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளதற்கு மதுரை எம்பி வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் சாதாரண கட்டணத்தில் வண்டிகள் இயக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
தெற்கு ரயில்வேயில் முன்பு ஓடிக்கொண்டிருந்த சாதாரண பயணி வண்டிகளை இயக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன்.
 
இப்போது மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட புனலூர்- கொல்லம் ;மதுரை- இராமேஸ்வரம்; திருச்செந்தூர்- திருநெல்வேலி; செங்கோட்டை- திருநெல்வேலி  ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே முன்பதிவில்லா பொது பெட்டிகளைக் கொண்ட விரைவு ரயில் 30 .5 .2022 முதல் இயக்கிட தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. அதற்கான உத்தரவு 17 .5 .22 வெளியிடப்பட்டுள்ளது .
 
அத்துடன் கோயமுத்தூர்- மேட்டுப்பாளையம் இடையே 23. 5 .2022 முதல் விரைவு வண்டி பொது பெட்டிகளுடன் இயக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது .இதுவும் வரவேற்கத்தக்கதே. இது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் முகமாக அமைந்துள்ளது.
 
எனினும் சாதாரண கட்டணத்தில் வண்டிகள் இயக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்.