வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (14:27 IST)

மதுரை வெள்ளம்: செல்லூர் ராஜூ சொல்ற மாதிரி செய்யலாம்! - அமைச்சர் கே.என்.நேரு!

மதுரையில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துல்ளார்.

 

 

மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன், வைகை ஆற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மதுரையில் வெள்ள நிலைமையை ஆராய்ந்து துரித நடவடிக்கைகளை எடுக்க அமைச்சர் மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகரஜன் உள்ளிட்டோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

 

இந்நிலையில் அமைச்சர் மூர்த்தி வெள்ள ஆய்வு பணிகளில் இருந்தபோது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் ஆய்வு பணிகளுக்கு வந்த நிலையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

 

வைகை அணைக்கு செல்லும் மற்றொரு வழி அடைக்கப்பட்டு விட்டதாகவும், அதை கண்டுபிடித்து சரி செய்தால் பிரச்சினைகளை தீர்க்கலாம் என்றும் செல்லூர் ராஜூ அமைச்சர் மூர்த்தியிடம் அறிவுறுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியபோது “செல்லூர் ராஜூ கூறியதை செய்தால் செல்லூர் கண்மாயில் அதிக அடைப்பு ஏற்படாது” என கூறியதுடன், அனைத்து விதமான ஆலோசனைகளும் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K