தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு மாற்றம்! – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை செனை கொண்டுவரவும், கல்வெட்டியல் கிளை பெயரை மாற்றவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை தமிழக தொல்லியல் துறைக்கு கொண்டு வரவேண்டுமென மணிமாறன் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை 6 மாத அவகாசத்திற்குள் தமிழ் கல்வெட்டுகளை சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டு கிளைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது.
மேலும் தொல்லியல்துறையின் கிளையான கல்வெட்டு இயல் கிளையை தமிழ் கல்வெட்டு இயல் என பெயர் மாற்றவும், கல்வெட்டு இயலுக்கு போதுமான வசதிகள் மற்றும் கல்வெட்டு நிபுணர்களை பணியமர்த்தவும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.