Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடியேற்றத்துடன் துவங்கியது மதுரை சித்திரை திருவிழா!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (11:42 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் சற்று முன் விமர்சையாக துவங்கியது. 

 
இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டுவிட்டது. இதனைத்தொடர்ந்து வருகிற 12 ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13 ஆம் தேதி திக் விஜயமும் நடைபெறுகிறது.
 
மேலும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய வைபவமான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 14 ஆம் தேதி, ஏப்ரல் 15 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். அதனையடுத்து வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது. 

எல்லாம் காட்டு

மானை வேட்டையாடிய 3 பேரை என்கவுண்டர் செய்த வனத்துறை!....

அம்மாவ கேட்டாதான் அப்பா யாருன்னு தெரியும்!.. நயினார் நகேந்திரன் சர்ச்சை பேச்சு!...

தளபதி விஜய் சாலை!. முதல்வருக்கு வேறமாறி நன்றி சொன்ன கிராம மக்கள்!...

விஜயோட ஆசையே இதுதான்!. வெயிட் பண்ணி பாருங்க!.. ஹைப் ஏத்தும் எஸ்.ஏ.சி!..

திமுக இதைத்தான் பண்ணும்!. அத யூஸ் பண்ணிக்கலாம்!.. விஜய்க்கு ஐடியா கொடுத்த மாணிக்கம் தாகூர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments