புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 நவம்பர் 2020 (12:35 IST)

விமானம் மேல் ரோட்டுல.. வாகனங்கள் கீழ் ரோட்டுல! – மதுரையில் புதிய திட்டம்!

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் காரணமாக விமான இறங்குதளத்திற்கு கீழ் ரிங்ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பிறகு அதிக போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்கான இடம் கையகப்படுத்தல் பணி பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மதுரை விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்கு தென் தமிழக மாவட்டங்களிலிருந்து மதுரை வரும் சுற்றுசாலை இடையூறாக உள்ளது.

இந்நிலையில் விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யவும், போக்குவரத்து பாதை இடையூறை தவிர்க்கவும் புதிய திட்டம் ஏற்படுத்தப்பட உள்ளது. அதன்படி விரிவாக்கம் செய்யப்படும் பகுதியில் மேல் தளத்தில் ஓடு தளமும், கீழ்பகுதியில் அண்டர்பாஸ் வழிதடமாக ரிங்ரோடு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வாரணாசியில் மட்டும்தான் ஓடுதளத்திற்கு கீழ் இவ்வாறாக சாலை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.