மதுரை எய்ம்ஸ் பணி எப்போது நிறைவடையும்? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!
மதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது நிறைவடையும் என்பதை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க போவதாக மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிவித்த நிலையில் இன்னும் கட்டுமான பணிகள் கூட தொடங்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? எப்போது கட்டி முடிப்பீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய அரசின் வழக்கறிஞர் கொரோனா காலத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தாமதம் ஏற்பட்டது என்றும் கட்டுமான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் 2026 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிந்து விடும் என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதி குறிப்பிட்டு கொரோனா 2022 ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது, அதை காரணம் காட்டாதீர்கள், என்று சொன்னதோடு, எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது நிறைவடையும் என்பதை மதிய சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Edited by Mahendran