ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (13:36 IST)

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் திடீர் மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி..!

சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில், விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திடீர் மயக்கம் ஏற்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் உடனடியாக  மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, தேமுதிக தலைமை அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்ற நிலையில் இந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற சண்முக பாண்டியன் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக சண்முக பாண்டியன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட சண்முக பாண்டியனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Siva