செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2022 (18:37 IST)

அசாம் மாநிலத்தில் மதரசாவை இடித்த போலீஸார்

Madhara assam
பயங்கரவாதிகளின் செயல்களுக்குப் பயன்பட்டதாக மதரசாவை  போலீஸார் இடித்துள்ளனர்.

இந்தியாவில் ஏ.க்யூ.ஐ.எஸ், அல்குவைதா மற்றும் அன்சருள் பங்ளா டீம் உள்ளீட்ட பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில், இந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய  37 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் இமாம், மதரசா ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் அடங்குவர். இன்னும் சிலர் தலைமறைவாகியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில்,  தாக்குத நடத்தத் திட்டம் தீட்டியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்துள்ள  நிலையில், அந்த மதரசாவை போலீஸார் இடித்துள்ளனர்.