செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 மார்ச் 2021 (14:17 IST)

அத்துமீறிய பேராசிரியர்; மாணவி தற்கொலை முயற்சி! – மாணவர்கள் போராட்டம்!

சென்னை பல்கலைகழக தொல்லியல் துறை பேராசிரியர் மாணவியிடம் அத்துமீறியதாக புகார் அளித்த நிலையில் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்கலைகழகத்தில் தொல்லியல் துறையின் பேராசிரியராக இருந்து வருபவர் சௌந்தர்ராஜன். சமீபத்தில் இவர் அந்த துறையை சேர்ந்த மாணவி ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் பேராசிரியர் மீது பல்கலைகழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 5 நாட்களாக மாணவர்கள் போராடி வந்த நிலையில் பேராசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவி இன்று கையை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது. மாணவி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.