திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 24 பிப்ரவரி 2025 (14:26 IST)

ஈஷா யோகா மையத்தில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரிக்கு தடை இல்லை: நீதிமன்றம் உத்தரவு..!

கோவை அருகே உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த கொண்டாட்டத்தில் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி சிவராத்திரி விழா ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்பட உள்ளது. சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் அமித்ஷா உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், ஒலி மாசு ஏற்படும் வகையில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படுவதாக கூறி, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பசுமை தீர்ப்பாய விதிமுறைகளை பின்பற்றியே விழா நடத்தப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டது. இதனை அடுத்து, இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Edited by Mahendran