புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (20:37 IST)

70 வருட பாரம்பரிய திமுகவை ஆட்டி வைக்கும் இரண்டு இளைஞர்கள்

கடந்த 1949ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, 70 வருட பாரம்பரியமிக்க கட்சி திமுக என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த கட்சி 5 முறை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்து உள்ளது என்பதும் அண்ணா, கருணாநிதி போன்ற ஆளுமையுள்ள தலைவர்கள் கட்சியை வழி நடத்தி வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் மாநிலத்தில் மட்டுமின்றி மத்தியிலும் அதிகார பலத்துடன் இருந்த கட்சி திமுக என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். மத்தியில் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்து முக்கிய பொருப்புகளை கையில் வைத்திருந்த கட்சி திமுக என்பது அனைவரும் அறிந்ததே
 
மேலும் எந்த பெரிய ஊடகங்களும் திமுக பகைத்து கொள்ளாது என்பதும் அந்த அளவுக்கு ஒரு ஆளுமை மட்டுமின்றி ஊடகங்களுடன் அனுசரணையாகவும் இருந்த கட்சி திமுக. இவ்வாறு 70 வருட பாரம்பரியமிக்க ஒரு கட்சியை தற்போது இரண்டே இரண்டு இளைஞர்களை ஆட்டிப் படைத்து வருகின்றனர். அவர்கள் மாரிதாஸ் மற்றும் மதன் 
 
இவரகள் இருவரும் திமுகவுக்கு எதிரான ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நிலையில் இந்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் இன்றைய தலைவர்கள் திணறி வருவதாகவே கருதப்படுகிறது. மேலும் இருவருக்கு எதிரான வரும் ஒருசில மிரட்டல்களால் சமூக வலைதளங்கள் பற்றி எரியத் தொடங்கி விட்டது திமுகவுக்கு தர்மசங்கடத்தை கொடுத்து வருகின்றது
 
இவற்றையெல்லாம் பார்க்கும்போது  ரஜினிகாந்த் சொன்னதுபோல் ஆளுமையுள்ள தலைவர் தமிழகத்தில் இல்லையோ என்று எண்ண தோன்றுகிறது. இன்றைய நிலையில் கருணாநிதி போன்ற ஆளுமையுள்ள தலைவர்கள் இருந்திருந்தால் இந்த இரண்டு இளைஞர்களை வெகு எளிதாக சமாளித்து இருப்பார் என்றே திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்