செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (12:54 IST)

துரத்தி துரத்தி கடித்த வெறி நாய்கள்.! சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்.!!

Dog Bite
கள்ளக்குறிச்சி அருகே வெறி நாய்கள் கடித்ததில் காயமடைந்த சிறுவர்கள் உட்பட 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
கள்ளக்குறிச்சி அடுத்த வி.மாமந்தூர் கிராமத்தில் வெறி நாய்கள்  சுற்றித்திரிகின்றன. காலைக்கடன் முடிப்பதற்காக ஏரிகரை சென்ற சிறுவர்களை தெருநாய்கள் துரத்தியதாக தகவல் வெளியாகியது. தெருநாய்கள் துரத்துவதை கண்டு ஓட்டம் பிடித்த சிறுவர்கள் உட்பட 15 பேரையும் நாய்கள் கடித்து குதறின.

இதில் கை, கால், முகம் என பல்வேறு இடங்களில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நாய்க்கடிக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  தெரு நாய்கள் கடித்ததில் காயம் அடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
சாலைகளில் திரியும் வெறிநாய்களை உடனே பிடித்து, நாய் பராமரிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.