1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (12:09 IST)

2024-ஆம் ஆண்டு 2-வது சிறந்த மாநகராட்சிக்கான முதலமைச்சா் விருதை தூத்துக்குடிக்கு - அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில், 2023-24 ஆம் ஆண்டில் 2வது சிறந்த மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.
 
சென்னையில் நடைபெற்ற‌ சுதந்திர தின விழாவில்
சிறந்த மாநகராட்சிக்கான ‘முதலமைச்சா் விருது 2024’ இரண்டாவது பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை அமைச்சா் பெ.கீதா ஜீவன், மேயா் என்.பி.ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் ஆகியோரிடம் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வழங்கினார்.
 
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சுகாதாரப் பணிகள், சாலை வசதிகள் ஆகியவற்றில் சிறப்பான செயல்பாட்டிற்காக இவ்விருது வழங்கப்பட்டது