இரண்டு நாட்களாக இல்லாத கொரோனா பலி! – மன நிம்மதியில் அமைச்சர்!
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பலிகள் இல்லாமல் இருப்பது நிம்மதியை தருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒமிக்ரான் பரவல் காரணமாக தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது. தமிழகத்திலும் பாதிப்புகள் அதிகரித்ததால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஒருவர் கூட கொரோனாவால் பலியாகாத நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஒருவருக்கும் கொரோனா இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு கொரோனா பலி கூட இல்லாமல் இருப்பது மன அமைதியை தருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.