படத்தில் மட்டும் ஹீரோவாக வசனம் பேச கூடாது - விஜய்க்கு நீதிபதி கண்டனம்!
தமிழ் நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை இங்கிலாந்திலிருந்து வாங்கினார். இந்த காருக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் வரியில் தளர்வு அளிக்க கோரி நடிகர் விஜய் அப்போது மனு அளித்திருந்தார்.
மனு அளித்து 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மனு மீதான விசாரணையில் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதித்துள்ளது. இந்த அபராதத்தை முதல்வர் கோவிட் பொது நிவாரண நிதியில் இரண்டு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நீதிபதி, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது. வரி என்பது நன்கொடை அல்ல. கட்டாய பங்களிப்பு என விளக்கம் தெரிவித்துள்ளார்.