1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (14:27 IST)

வாக்காளர்களுக்கு வழங்க மூட்டை மூட்டையாக புடவை: ஈரோடு அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு..!

வாக்காளர்களுக்கு  கொடுப்பதற்காக மூட்டை மூட்டையாக வாங்கி வைக்கப்பட்டிருந்த புடவைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த நிலையில் இது குறித்து ஈரோடு அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஈரோடு அதிமுக வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் ஆற்றல் அசோக் என்பவருக்கு 500 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக சமீபத்தில் தெரியவந்தது. இந்த நிலையில் ஈரோட்டில் அவர் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக புடவைகளை பதுக்கி வைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

ஈரோட்டில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக் கடையில் இருந்து மூட்டை மூட்டையாக  புடவைகளை   நேற்று தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் பறக்கும் படையினர் அறிவித்துள்ளனர்

வாக்காளர்களுக்கு இலவசமாக கொடுப்பதற்காக மூட்டை மூட்டையாக புடவைகளை பதுக்கி வைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva