வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 21 ஜனவரி 2019 (17:36 IST)

இந்து அமைப்புகளின் எதிர்ப்புக்கு மன்னிப்புக் கோரியது லயோலா கல்லூரி...

இந்து மதம் தொடர்பான சர்ச்சை ஓவியம் வரைந்ததற்காக மன்னிப்புக் கோரியது லயோலா கல்லூரி.வீதி விருது அமைப்பில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஓவியம் வரைந்தமைக்காக பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் லயோலா கல்லூரிக்கு கடும் நெருக்கடிகள் வந்தன. இந்நிலையில் சமூக அமைதியைக் கெடுக்கும் எந்த செயலையும் இந்த ஓவியங்களையும் நாங்களே ஆதரிக்கவில்லை என கல்லூரி நிர்வாக தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
வீதி விருது விழாவுக்காக நாங்கள் கொடுத்த அனுமதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்து லயோலா கல்லூரி மன்னிப்புக் கேட்டுள்ளது.
 
மேலும் சமூக அமைதியை சீர்குழைக்கும் எந்த செயலையும் நாங்கள் ஆதரிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம்  விளக்கம்  தந்துள்ளது. 
 
இந்து கடவுள், மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய ஓவியங்கள் பற்றி அறிந்ததும்  அவற்றைக் கண்காட்சியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் கல்லூரி தரப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.