புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2024 (13:22 IST)

விளையாட்டில் ஆர்வம் இருந்தால் ஆயுள்காலம் அதிகரிக்கும்.! அமைச்சர் மெய்யநாதன்..!!

minister meynathan
விளையாட்டில் ஆர்வம் இருந்தால் ஆயுள் காலம் அதிகரிக்கும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா உடல் கல்வியியல் கல்லூரில் தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டி வருகிற 22 தேதி வரை நடைபெறுகிறது. இதில், தமிழகம், பாண்டிச்சேரி கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களை சேர்ந்த 40 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றுள்ளன. 
 
இந்த கிரிக்கெட் போட்டியை அமைச்சர் மெய்யநாதன்  கலந்து துவக்கி வைத்தார்.  தொடர்ந்து கிரிக்கெட் மைதானத்தில் மாணவி பந்து வீச கிரிக்கெட் மட்டையால் அடித்து ஆடி  மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

 
முன்னதாக செய்தியாளரிடம் பேசிய அவர்,  விளையாட்டில் ஆர்வம் இருந்தால் ஆயுள் காலம் அதிகமாகும் என்று கூறினார். தமிழர்களின் வீர விளையாட்டு அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது என்றும் உயிரிழப்புகளை  தடுக்கும் வகையில்  ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக விளையாட்டு மைதானத்தை முதல்வர் திறந்து வைக்க உள்ளார் என்றும் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்