செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 14 டிசம்பர் 2019 (20:41 IST)

அடேங்கப்பா! ஆடி காரில் சென்று ஓட்டு கேட்ட வேட்பாளர்!

தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளதால் வேட்பாளர்கள் பலர் வாக்கு சேகரிப்பை இப்போதே தொடங்கி விட்டார்கள்.

பல ஊராட்சிகளில் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் பல நூதனமான முறைகளை பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் புதுகோட்டை மாவட்டம் காரையூர் ஊராட்சியில் போட்டியிடும் இக்பால் வாக்கு சேகரித்த முறைதான் இன்று அந்த பகுதியில் பேச்சாக உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு அளிக்க சென்ற இக்பால் அவரது நண்பரின் ஆடிக்காரில் ஏறிக்கொண்டு மேல் கதவை திறந்து கொண்டு அதன் வழியாக மக்களிடம் வாக்கு சேகரித்தவாறே சென்றுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் காரையூர் கடைவீதி பகுதியில் தேர்தல் அலுவலகத்தையும் திறந்து வைத்துள்ளார்.

மேலும் அவர் மனு தாக்கல் செய்ய போவதாக ஏற்கனவே நோட்டீஸ் அடித்து மக்களிடம் விநியோகித்துள்ளார். நண்பரின் ஆடி காரில் நின்று கொண்டு வாக்கு சேகரித்தபடியே இக்பால் சென்ற சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.