திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (23:56 IST)

“உலக ரத்ததான தினம்” ஒரு முறை செய்வோம்…. நான்கு உயிர்களை காப்போம்…!!

“உலக ரத்த தான தினம்” கொடுக்கும் தானத்தை குறையின்றி கொடுப்போம்…!! – பல ஆண்டுகளாக ரத்த தானம் கொடுத்து வரும் ரத்தக்கொடையாளர்கள் புதிய இளைஞர்களுக்கு வேண்டுகோள் ! ரத்தம் கொடுப்பதினால் இளமையும், சுறுசுறுப்பும் வரும் என்பதோடு, பெருகும் என்பதால் ஒவ்வொருவரும் ரத்தம் கொடுங்கள் ! ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையும், பெண்கள் 6 மாதத்திற்கு ஒருமுறையும் ரத்தம் கொடுப்பது அவசியம் !

சர்வதேச அளவில் உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14 ஆம் தேதி உலக இரத்தக் கொடையாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இரத்த வகைகள் குறித்து அறியப்படாத காலத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இயலாமல் போனது. ரத்த பரிமாற்றத்திலும் எதிர்விளைவுகள் ஏற்பட்டன. 1901 ஆம் ஆண்டில் லேன்ஸ்டைஜர் என்பவர் ரத்தத்திலுள்ள A, B, AB, O வகைகளை முதன் முதலில் கண்டறிந்தார். இதன் மூலம் மனித ரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது.

ஒருவர் தன் வாழ்நாளில் ஒருமுறை இரத்ததானம் செய்வதன் மூலம் நான்கு உயிர்களை காப்பாற்ற முடியும். ஒரு மனிதரின் முதலில் 4 முதல் 6 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. உலக அளவில் ஆண்டுதோறும் 6.8 மில்லியன் மக்கள் ரத்தத்தை கொடையாக வழங்குகின்றனர். பல சமூக வலைதளங்களில் குழுக்கள், ரத்த வங்கிகள் உதவியோடு தானமாக பெறப்பட்ட ரத்தம் உரிய முறையில் சேமிக்கப்படுகின்றது. 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 45 கிலோ உடல் எடைக்கு மேல் உள்ளவர்கள் தாராளமாக இரத்த தானம் வழங்க முடியும்.

மருத்துவமனைகளில் ரத்தம் பெறப்படும் முன்னர் சில பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பின்னரே தானமாக இரத்தம் கொடுக்க கொடையாளர் அனுமதிக்கப்படுவார். ஒருவர் உடலில் இருந்து 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படும். கொடையாக வழங்கிய 24 மணி நேரத்திற்குள்ளாக நமது உடலால் மீண்டும் ரத்தம் ஈடு செய்யப்பட்டு வருகின்றது. ஆண்கள் வருடத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒருமுறையும் தாராளமாக இரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்வோம், இன்னுயிர் காப்போம்.  தமிழக அளவில் மைய மாவட்டமாக விளங்கும் கரூரில் ஏராளமான ரத்தக்கொடையாளர்கள் தினம், தினம் பெருகி வரும் நிலையில், ரத்தக்கொடையாளர்கள் ரத்தம் எப்போது வேண்டுமென்றும், எங்கு வேண்டுமென்றும் கூறி தாமாகவே ஏராளமான ரத்தக்கொடையாளர்கள் உதவி மற்ற உயிர்களை காத்து வருகின்றனர். மேலும், ஆண்கள் 3 மாதத்திற்கு ஒருமுறையும், பெண்கள் 6 மாதத்திற்கு ஒருமுறையும் கொடுக்கும் ரத்தம் ஆனது பல்வேறு வியாதிஸ்தர்களையும், விபத்துகளில் மாட்டியுள்ளவர்களையும் காக்க முடிகின்றதால், ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வயது வரம்பின்றி உதவும் மனப்பான்மையில், சரியான எடை மற்றும் 18 வயது முதல் 60 வயது வரையுள்ளவர்கள், 45 கிலோவிற்கு மேல் உள்ளவர்கள் ரத்தத்தினை மற்றவர்களுக்கு கொடையாக கொடுக்கலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை, ஆகவே, ரத்த தான முகாம் என்பது வெறும் முகாம் மட்டுமல்ல, ஏராளமானோவர்களின் உயிர்பிழைக்க செய்யும் ஒரு உன்னத செயல் என்பதை அனைவரும் புரிந்து கொண்டும், மற்ற உயிர்களையும் பிழைக்க வைக்கும் ஒரு அபூர்வ செயல் தான் நாம் கொடுக்கும் ரத்த தானம் ஆகும் என்பதால் சரியான முறையில், ஹிமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு மேல் இருக்க வேண்டுமென்றும், இரத்த தானம் செய்ய 20 நிமிடங்கள் மட்டுமே தேவை என்றும் இரத்த தானம் செய்த 30 நிமிடங்களுக்கு பிறகு வழக்கம் போல், அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம் என்றும் ரத்த தானம் செய்பவர்கள் கடைபிடித்தும் அறிவுறுத்தப்பட்டும் வருகின்றார்கள். உலக ரத்த தான முகாமில், ஏராளமானோவர்கள் ஒன்றுபட்டு ரத்த தானம் செய்ய சபதம் ஏற்றால் விபத்துகள் மற்றும் வியாதிக்குள் உள்ளவர்களை நாம் கொடுக்கும் ரத்தம் மூலம் மறு ஜென்மம் கொடுக்கலாம் என்பது ரத்தக்கொடையாளர்கள் மற்றும் பொது மற்றும் சமூக நல ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாகும்.