வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2020 (13:59 IST)

ஸ்டாலினை தாய்மார்கள் சும்மா விடமாட்டார்கள்; முதல்வர் கனவு அவ்ளோதான்! – எல்.முருகன் எச்சரிக்கை!

பெண்கள் குறித்து அவதூறாக திருமாவளவன் பேசியதாக உருவான சர்ச்சையில் ஸ்டாலின் திருமாவிற்கு ஆதரவாக பேசியதற்கு பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெண்கள் குறித்து மனுதர்மத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் “திருமாவளவன் பேசியதை கத்தரித்து திரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது” என தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ”கருப்பர் கூட்டத்திற்கு திமுகவிற்கும் சம்பந்தம் இல்லை என மு.க.ஸ்டாலின் இதுவரை நேரடியாக சொல்லவில்லை. தமிழ் கடவுளை இகழ்ந்து பேசுபவர்களையோ, பெண்களை அவதூறாகவோ பேசுபவர்களை மு.க.ஸ்டாலின் கண்டிப்பதில்லை. இதற்காக அவர் தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். ஸ்டாலினை தாய்மார்கள், பெண்கள் சும்மா விட மாட்டார்கள். ஸ்டாலின் முதல்வர் கனவு பலிக்காது” என கூறியுள்ளார்.