இரண்டாவது நாளாக 3000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!

Virus
siva| Last Updated: ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (18:32 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,09,005-ஆக அதிகரித்துள்ளது! தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை 3000க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30,606-ஆக அதிகரித்துள்ளது! சென்னையில் புதிதாக 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது! சென்னையில் மொத்த பாதிப்பு: 1,95,672 என்பதும், மொத்த உயிரிழப்பு 3592 என்பதும் மொத்தம் குணமடைந்தோர்: 1,82,441 என்பதும் மொத்தமாக சிகிச்சையில் உள்ளோர் 9639 என்பதும் குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4019 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 6,67,475-ஆக அதிகரித்துள்ளது!


இதில் மேலும் படிக்கவும் :