குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குற்றாலம் அருவிகளில் சமீபத்தில் குளிக்க தடை விதித்த நிலையில் இரு நாட்களுக்கு பின் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சீசன் காலம் முடிந்தபிறகும், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆதலால் இரண்டு நாட்களுக்கு முன் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படடது.
இந்நிலையில் தற்போது குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பின் தடை தளர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.