புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (07:46 IST)

ரஜினி கட்சியில் இணைகிறாரா குஷ்பு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்றார். அவர் கூறி கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியும் இன்னும் அவர் அரசியல் கட்சியை தொடங்கவில்லை. இருப்பினும் அரசியல் கட்சியை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை அவர் செய்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் கட்சியில் பல்வேறு கட்சியில் உள்ள பிரமுகர்கள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமாகிய குஷ்பு, ரஜினி கட்சி ஆரம்பித்தவுடன் அவர் கட்சியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்த குஷ்பு, '''நான் காங்கிரஸ் கட்சியுடன் திருப்தியாக இருக்கிறேன். அரசியலில் நான் ரஜினியோடு இணையமாட்டேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் ரஜினி கட்சி ஆரம்பித்தவுடன் குஷ்பு மனம் மாறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்