செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 4 ஜூலை 2024 (12:47 IST)

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லிக் கொடுங்கள் என்று நடிகையும் பாஜக பிரபலமான குஷ்பு கிண்டல் செய்துள்ளார்.
 
 நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.  யாராவது ராகுல் காந்திக்கு கணக்கு கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள், இவர் நாடாளுமன்ற தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்றது மிகப்பெரிய சாதனை என்று நினைக்கிறார். அவர் பெற்றது நூற்றுக்கு 99 அல்ல, 543க்கு 99 என்று கூறினார்.
 
மேலும் ராகுல் காந்தி ஒவ்வொரு இந்துக்களின் நம்பிக்கையையும் அவமானப்படுத்தி உள்ளார் என்றும் ஒவ்வொரு பிரார்த்தனைகள் மீதும் சந்தேகம் எழுப்புகிறார் என்றும் ஒவ்வொரு நம்பிக்கையாளர்களையும் வன்முறையாளர் என குற்றம் சாட்டுகிறார் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
 
இதிலிருந்து ராகுல் காந்தி முதிர்ச்சியற்றவர் மற்றும் விரக்தி அடைந்தவர் என்பதை காட்டுகிறது என்றும் காங்கிரஸ் கட்சிக்கு திமிர் பிடித்து உள்ளது என்றும் கூறினார். இது போன்ற செயல்பாடுகளால் ராகுல் காந்தியின் உண்மை முகம் வெளியாகிக் கொண்டிருக்கிறது என்றும் குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.
 
Edited by Mahendran