செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஏப்ரல் 2021 (06:38 IST)

கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா:
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 
 
குறிப்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
அது மட்டுமின்றி அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலை உள்பட ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் அவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது
 
65 வயதான இவர் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன