சிக்கனுக்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிய நாய்

chicken
Sinoj| Last Modified சனி, 10 ஏப்ரல் 2021 (23:32 IST)

ஜெர்மன் செப்பர்ட் என்ற நாய் சிக்கன் தின்ன வேண்டும் என்ற ஆசையில் ஒரு குச்சியை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் நார்தம்டன் நகரில் வசித்து வருபவர் ரிச்சர்ட். இவர் ஆசையாக ஜெர்மன் செப்பர்ட் என்ற நாயை வளர்த்து வருகிறார். சமீபத்தில் தன் குடும்பத்தாருடன் சிக்கன் சாப்பிடும்போது,
கெபாப் குச்சியுடன் சிக்கனை நாய்க்கு போட்டுள்ளார்.

அந்தக் குச்சியுடன் நாய் சிக்கனை சாப்பிட்டுள்ளது. இது நாயின் வயிற்றில் சிக்கியதால் வயிற்று வலியால் அவதிப்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு நாயைக் கூட்டிச் சென்றார் ரிச்சர்ட். பின்னர் ஸ்கேன் செய்யப்பட்டு, நாயின் வயிற்றில் அறுவைச் சிகிச்சையின் மூலம் அக்குச்சியை மருத்துவர் அகற்றினார். நல்லவேளை நாயிக்கு எதுவும் ஆகவில்லை. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :