1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (15:47 IST)

கு க செல்வத்தின் மருமகன் விபத்தில் மரணம் – இடித்தவர்கள் தப்பி ஓட்டம்!

திமுகவில் இருந்து பாஜகவில் ஐக்கியம் ஆன கு க செல்வத்தின் மருமகன் பைக் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம் எல் ஏ வாகவும் திமுக வில் முக்கியப் புள்ளியாகவும் இருந்தவர் கு க செல்வம். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது. கு.க.செல்வத்தின் மூத்த மகளின் கணவர் துளசிராமன் (50). இவர் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார். தனது மகள் பூந்தமல்லிக்கு அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிப்பதால் அவரை இரு சக்கர வாகனத்தில் சென்று அடிக்கடி பார்த்து வந்துள்ளார்.

அப்படி நேற்று அவர் சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர் மேல் வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து அவரை அங்கிருந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர் சிலர். ஆனால் அவர் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அவர்கள் தான் விபத்தை ஏற்படுத்தியவர்களா அல்லது உயிருக்கு போராடிய துளசிராமனைக் காப்பாற்றுவதற்காக அவரை மருத்துவமனையில் சேர்த்தவர்களா என்பது தெரியவில்லை. இது சம்மந்தமாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.