கனல் கண்ணனுக்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம்!
பெரியார் சிலைகளை உடைக்க வேண்டுமென்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கனல் கண்ணனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
சமீபத்தில் ஸ்ரீரங்கம் பகுதியில் நடந்த இந்து முன்னணி கூட்டமொன்றில் பேசிய சினிமா ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எதிராக உள்ள கடவுள் இல்லை என்ற சொல்பவரின் சிலையை உடைக்க வேண்டும் என்றும் அப்போது தான் இந்துக்களுக்கு எழுச்சி நாள் என்றும் பேசினார்
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் கனல்கண்ணன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கனல் கண்ணனின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி சினிமா ஸ்டன்ட் இயக்குனர் கனல் கண்ணன் பேசியிருப்பது உரிமைகளுக்கும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வன்முறை பேச்சு என்றும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பேச்சு என்றும் கூறியுள்ளார்
மேலும் சிறிய பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று பேசிய கனல் கண்ணனுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்