வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (15:10 IST)

ஒரு கிலோ தக்காளி ரூ.5க்கு விற்பனை: வேதனையில் தக்காளியை ஆற்றில் கொட்டிய விவசாயி..!

ஒரு கிலோ தக்காளி ஐந்து ரூபாய்க்கு விற்பனை ஆனதை அடுத்து வேதனையுடன் மூன்று டன் தக்காளியை ஆற்றில் கொட்டிய விவசாயி ஒருவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி என்ற பகுதியில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் விளைந்த சுமார் மூன்று டன் தக்காளியை விற்பனை செய்வதற்காக மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றார். 
 
அங்கு ஒரு கிலோ தக்காளி ஐந்து ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அறுவடை செய்யப்பட்ட பணம் கூட வராது என்ற சோகத்தில் அவர் மூன்று டன் தக்காளியை வேதனையுடன் அருகில் இருந்த ஆற்றில் கொட்டினார். இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
தக்காளி விலை குறையும்போதெல்லாம் தக்காளி விவசாயிகள் தக்காளி சாஸ் மற்றும் தக்காளி ஜூஸ் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran