ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2023 (21:31 IST)

ஒரு மாதத்துக்குள் இரண்டு ஆணவ படுகொலைகள்- டிடிவி.தினகரன் டுவீட்

ttv dinakaran
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தன் பெற்ற மகனை தந்தை  கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள அருணபதி என்ற பகுதியில்,  காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட சுபாஷ் அவருக்கு உதவிய பாட்டி கண்ணம்மாவை  தந்தைய தண்டபானி வெட்டிக் கொன்றார். அதேபோல், அரிவாளால் வெட்டியதில், சுபாஷின் மனைவி அனுஷா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’தருமபுரி அருகே தந்தையே மகனை ஆணவ படுகொலை செய்ததாகவும், மருமகளை கொடூரமாக தாக்கியதாகவும் வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்குள் இரண்டு ஆணவ படுகொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க தனிசட்டம் இயற்றப்படும் என எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது கூறியதை முதல்வரான பின்னர் மறந்து விட்டாரோ என்று கருதத் தோன்றுகிறது.

தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக  கடுமையான சட்டத்தை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.’’என்று தெரிவித்துள்ளார்.