ஒரு கிலோ தக்காளி ரூ.10, கீழே கொட்டுவதற்கு பதில் மாற்றி யோசித்த விவசாயிகள்..!
தக்காளி விலை சரிந்தால் விவசாயிகள் தக்காளியை சாலையில் கொட்டிவிடும் சம்பவங்கள் குறித்து அடிக்கடி பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் தற்போது தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என சரிந்துள்ள நிலையில் மாற்றி யோசித்த தக்காளி விவசாயிகள் தற்போது நல்ல லாபம் பார்த்து வருகின்றனர்.
தக்காளி விலை சரியும்போது கிலோ ரூ.5, 10 என்று விற்பனையாவதும், தக்காளி விலை உயரும் போது ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனையாவது மாறி மாறி நடந்து வரும் நிகழ்வாக உள்ளது.
இந்த நிலையில் தக்காளி விலை தற்போது சரிந்து உள்ளதை அடுத்து தக்காளி பழச்சாறு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தக்காளி விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்
தரம் குறைந்த தக்காளியாக இருந்தாலும், நல்ல தக்காளியாக இருந்தாலும் தக்காளி சாஸ் உள்ளிட்ட பழச்சாறு செய்பவர்களுக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் தக்காளிகளை விவசாயிகளின் இடத்திற்கே வந்து பழச்சாறு நிறுவனங்கள் எடுத்துச் செல்வதால் போக்குவரத்து செலவும் மிச்சம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தினசரி 200 டன் வரை பழச்சாறுஆலைக்கு விவசாயிகள் தரமான தக்காளிகளை விற்பனை செய்து வருவதாகவும் இதனால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே தக்காளி விலை குறையும் போதெல்லாம் அனைத்து விவசாயிகளும் இது போன்ற நடவடிக்கை எடுத்தால் அவர்கள் லாபம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran