செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 2 மே 2020 (08:31 IST)

தமிழகத்தில் ஒரே ஒரு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள்! மாநில அரசின் முடிவு என்ன?

பச்சை மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2400க்கும் மேல் உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மே மாதம் 3 ஆம் தேதிவரை  நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதலில் குடிகாரர்களும் , குடிக்கு அடிமையானவர்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று ஊரடங்கை இன்னும் இரு வாரங்களுக்கு நீட்டித்துள்ள மத்திய அரசு மேலும் சில வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி பச்சை மண்டல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை சமூக இடைவெளியோடு திறக்கலாம் என அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதுகுறித்து மாநில அரசு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பச்சை மண்டலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே உள்ளது. ஆனால் அந்த மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.