கோகுலாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணன் பலராமன் அலங்காரம்
கரூர் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று கோகுலாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணன் பலராமன் அலங்காரம் செய்யப்பட்டு கோலகல கொண்டாட்டம்
கரூர் மாநகராட்சியின் மையப்பகுதியில் ஜவஹர் பஜார் தெருவில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில், கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, ஆலய வளாகத்தில் கிருஷ்ணனுக்கு சந்தனத்தினால் செய்யப்பட்ட அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணர் பலராமன் பொதுமக்களுக்கு காட்சியளித்தார்.
கிருஷ்ணர் முன்பு கிருஷ்ணர் பாதங்கள் அலங்காரமாக வரைந்து 48 பாதங்களினை கரூர் வாசவி மகிளா மண்டலியினர் செய்து வைத்திருந்தனர். பின்னர் அவர்களது வீட்டிலிருந்து எடுத்து வரப்பட்ட கிருஷ்ணர் அலங்காரங்கள் அப்படியே காட்சிக்கு வைக்கப்பட்டன. முன்னதாக ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, கிருஷ்ணர் மற்றும் கிருஷ்ணர் பாதங்களுக்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
கரூர் வாசவி மகிளா மண்டலியினரின் சிறப்பு பூஜைகளும் அதனை தொடர்ந்து கும்மியாட்டமும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், ஏராளமான பெண்கள் தங்களது அலங்கார கிருஷ்ணருடன் செல்பி எடுத்து கொண்டனர். இதற்கான முழு ஏற்பாடுகளை தமிழ்நாடு ஆரிய வைசிய மகிளா விவாஹ் சிறப்பாக செய்திருந்தனர்.