சசிகலாவுக்கு இனி அதிமுகவில் இடமே இல்லை: கேபி முனுசாமி

kp munusamy
சசிகலாவுக்கு இனி அதிமுகவில் இடமே இல்லை
siva| Last Updated: ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (13:56 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்று தற்போது பெங்களூர் சிறைச்சாலையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இந்த மாத இறுதியில் விடுதலையாகலாம் என்று பரவலாக ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது
இந்த நிலையில் சசிகலா விடுதலை ஆனால் அதிமுக தலைமையை கைப்பற்றுவார் என்று ஒரு வதந்தி உருவாகி வருகிறது. இதற்கு பதிலளித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கேபி முனுசாமி ’சசிகலாவுக்கு இனி அதிமுகவில் இடமில்லை’ என்றும் ’சசிகலா விடுதலைக்குப் பின்னரும் அதிமுக வழக்கம் போல் செயல்படும்’ என்றும் கூறியுள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சசிகலா விடுதலை ஆனபிறகு அதிமுகவிலும், அரசியலிலும் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் எந்த சூழ்நிலையிலும் சசிகலாவால் இனி அதிமுக கட்சிக்குள் நுழைய முடியாது என்றும் தெரிவித்துள்ளார். தன்னைப் பொறுத்தவரை சசிகலா ஜெயலலிதாவின் உதவியாளர் மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார். கேபி முனுசாமியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

மேலும் அதிமுகவில் சசிகலா இணைப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் சசிகலாவை ஒதுக்கியது ஒதுக்கியதுதான் அவர் மீண்டும் காட்சிக்கு நுழைய வாய்ப்பு இல்லை என்றும் உறுதிபடக் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் சசிகலா விடுதலை ஆன பின் தான் அதிமுகவின் உண்மையான நிலை என்ன என்பது தெரியவரும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :