கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு: அனைத்து சங்கங்களையும் கலைக்க கோரிக்கை!
கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு: அனைத்து சங்கங்களையும் கலைக்க கோரிக்கை!
கூட்டுறவு சங்கங்களில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதை அடுத்து அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் கலைக்க வேண்டுமென கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி எம்எல்ஏ ஈஸ்வரன் அவர்கள் கோரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து அவர் மேலும் கூறியபோது கூட்டுறவு சங்கங்களின் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்குவதில் தமிழகம் முழுவதும் பெருமளவில் முறைகேடுகள் நடந்து உள்ளது. எனவே அனைத்து கூட்டுறவு சங்கங்களும் கலைக்கப்பட்டு புதிதாக அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே கூட்டுறவு சங்கங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்களின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது