1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (10:01 IST)

கோயம்பேடு சந்தையில் குறைந்த காய்கறி விலை! – மக்கள் நிம்மதி!

Vegetables
கோயம்பேடு காய்கறி சந்தையில் நீண்ட நாட்கள் கழித்து காய்கறிகள் விலை குறைந்துள்ளது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை தொடர்ந்து பல்வேறு அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை உயர்வை சந்தித்தன.

ஆனால் இன்று விலை கணிசமாக குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கிலோ ரூ.20க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு ரூ.14 ஆகவும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.30ல் இருந்து ரூ.20 ஆகவும் குறைந்து விற்பனை ஆகி வருகிறது.

மேலும், கத்தரிக்காய் ரூ.20க்கும், எலுமிச்சை ரூ.110க்கும் விற்பனையாகி வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.