செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (15:26 IST)

கொடைக்கானலில் நாளை முதல் திறப்பு சுற்றுலாத் தலங்கள் திறப்பு!

கொடைக்கானலில் நாளை முதல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக கொடைக்கானலில் சுற்றுலா செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து நான்கு மாதங்களுக்குப் பின்னர் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, குணா குகை, பில்லர் ராக் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாளை முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது