வழக்குகளை விசாரிக்க தடை: கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்,.
கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் சுயமாக உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிப்பதற்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து இந்த முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மேல்முறையீடு வழக்குகளை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 5ஆம் தேதி முதல் திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, அமைச்சர் பதவியிழந்த பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran