வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2019 (16:48 IST)

மக்களே உஷார் ! வீடு கேட்பதாகக் கூறி மூதாட்டியை கொன்று நகை பறிப்பு

கோவையில் வீடு வாடக்கைக்கு கேட்பவர்கள்  போல சிலர் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று தங்க நகைகளை கொள்ளையைடித்து சென்றது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சவுரி பாளையம் பகுதியில் உள்ள வேளாங்கண்னி நகரில் வசித்த்து வந்தவர் மேரி ஏஞ்சலின்.  முன்னாள் செவிலியர் ஆவார். இவர் தன் வீட்டில் உள்ள போர்ஷனை வாடகைக்கு விடுவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் மேரி அம்மாவின் வீட்டிற்கு சிலர் வீடு பார்ப்பதாகக் கூறிக் கொண்டு வந்துள்ளனர். வீட்டைக் காண்பிக்க மேரி அவர்களை அழைத்துப் போகையில் அவர்கள் கத்தியால் மேரியின் கழுத்தினை அறுத்து அவர்  அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றனர். 
 
இந்நிலையில் தன் வீட்டுக்கு மனைவி திரும்பாததை அறிந்த மேரியின் கணவர் மனைவியை தேடிச் சென்றுள்ளார். வாடகை வீட்டை அடைந்ததும் அங்கு மேரு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததை பார்த்து பதறிப்போய் போலீஸாருக்கு தகவல் கூறினார்.
 
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்த கொலை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.