திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (15:56 IST)

பெண்ணுக்கும் ஆபாச படம் அனுப்பிய இளைஞர்கள்

நாமக்கல் மாவட்டம் பூங்குளம் பட்டி மலைவாழ் கிராமத்தில் வசிப்பவர் விஜயகுமார். இவர் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவர் ஆனந்தகுமார், ரவிராகுல், சரண்ராஜ் ஆகிய 3 பேரை வைத்து வேலை வாங்கி வந்துள்ளார். ஆனால் சரிவர சம்பளம் தரவில்லை. இதனால் இவர்களுக்குள் தகராறு எழுந்ததாகத்  தெரிகிறது.
இதனால் சமீப காலமாக இம்மூவரும் விஜயகுமாரிடம் வேலை செய்ய்யவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் விஜயகுமார் மனைவி காயத்ரியின் வாட்ஸ் அப் எண்னிற்கு ஆபாச படங்கள், குறுந்தகவல் வந்துள்ளது.இதனையடுத்து விஜயகுமார் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
 
பின்னர் போலிஸார் மேற்கொண்ட விசாரனையில் விஜயகுமாரின் முன்னாள் ஊழியர்களாஜ ஆனந்த குமார், ரவிகுமார், சரண்ராஜ், ஆகியோர் இந்த வேலையைச் செய்தது தெரியவந்தது.
 
இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.அவர்கள் மீது பெண்களை இழிவு படுத்துதல், பாலியல் துன்புறுத்தல், உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு வதிவு செய்து விசாரித்து வருவ்தாக தகவல் தெரிவிக்கின்றன. 
 
தமிழகத்தில் பொள்ளாச்சியில் இந்த கொடூரம் நடந்த நிலையில் இப்போது நாமக்கல்லிலும் இது இம்மாதிரி வக்கிர சம்வம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.