ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2024 (09:09 IST)

"கவுண்டம் பாளையம்" திரையிடக்கூடாது- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சிதம்பரம் மாரியப்பா தியேட்டரில் கவுண்டம் பாளையம் என்ற புதிய திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது இதில் விடுதலை சிறுத்தைகளை பற்றி கிண்டல் செய்யும் காட்சிகள் இருப்பதாகவும் விசிக என்பதற்கு பதில் ஓசிக்கா என்று இருப்பதாகவும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் அவர்களை கிண்டல் செய்து படத்தில் சில காட்சிகள் இருப்பதாகவும் இந்த திரைப்படத்தை இந்த தியேட்டரில் வெளியிடக்கூடாது என்று சிதம்பரம் காந்தி சிலை அருகில் சுமார் 20க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பின்பு சிதம்பரம் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது அதேபோல் கடலூர் எஸ்பி ஆபிஸில் மனு அளிக்கப்பட்டது சிதம்பரம் மாரியப்பா தியேட்டர் உரிமையாளர் மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவன ஸ்ரீதர் வாண்டயாருக்கு சொந்தமானது மாரியப்பா திரையரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.