வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2024 (18:35 IST)

கார்த்தி சிதம்பரம் - ஈவிகேஎஸ்.. இருவருமே கட்சியின் நலனுக்கு பேசவில்லை.. தொண்டர்கள் குமுறல்..!

காங்கிரஸ் பிரமுகர்களான கார்த்தி சிதம்பரம் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகிய இருவருமே கடந்த சில நாட்களாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் இதுகுறித்து கருத்து தெரிவ்த்த போது, இருவருமே கட்சியின் நலனுக்காக பேசவில்லை என்று கூறுகின்றனர்.
 
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கார்த்தி சிதம்பரம், திமுக குறித்து விமர்சனம் செய்திருந்தால் அவருக்கு சீட்டு கிடைத்திருக்காது. இப்போது அவர்  இவ்வாறு பேசினால் வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிடும். இதனால் காங்கிரஸ் கட்சியின் ஊராட்சி ஒன்றிய தலைவர் கவுன்சிலர் உள்பட அடிமட்ட தொண்டர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே அடிமட்ட தொண்டர்களை காலி செய்யவே கார்த்தி சிதம்பரம் இவ்வாறு பேசுகிறார் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கூறுகின்றனர்.
 
அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் வெற்றி பெற திமுக தான் காரணம். அந்த விசுவாசத்தில் தான் திமுகவை விமர்சனம் செய்தால் அவர் பதிலடி கொடுக்கிறார். இருவருடைய நோக்கமும் கட்சியை வளர்ப்பது இல்லை, தங்களின் சுயநலத்துக்காக பேசி வருகிறார்கள் என்று காங்கிரஸ் தொண்டர்கள் குமுறி வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran