செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 27 ஜூலை 2024 (09:18 IST)

நான் பேசியது முழுவதையும் கேளுங்கள்: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கார்த்தி சிதம்பரம் பதிலடி..!

karthi chidambaram
என்னுடைய 11 நிமிட முழு பேச்சையும் கேட்டபின் தங்களை தங்களது கருத்துக்கள் வெளியிடுங்கள் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு கார்த்தி சிதம்பரம் எம்பி பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேசியபோது கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும் தான் என்றும், கூட்டணி தர்மத்திற்காக ஆளுங்கட்சி தவறு செய்யும் போதெல்லாம் அதை கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது என்றும் மக்களுக்காக குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இதற்கு பதில் அளித்தால் ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக இல்லை என்றால் கார்த்தி சிதம்பரம் டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது என்றும் திமுக தான் அவருடைய வெற்றிக்காக வேலை பார்த்தது என்றும் தெரிவித்தார். 
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள கார்த்திக் சிதம்பரம் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டையில் நடைபெற்ற  தமிழக காங்கிரஸ்  மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் நான் பேசிய 11 நிமிட முழு உரையையும் கேட்டபின் தங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்’ என்று பதிவு செய்து அந்த 11 நிமிட உரையின் வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் என்ன பதில் அளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran