வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (13:26 IST)

நடிகை கஸ்தூரி ஆவேசம்: இப்பிடி பொழைக்கறதுக்கு வேற வேலை பாக்கலாம்!

நடிகை கஸ்தூரி ஆவேசம்: இப்பிடி பொழைக்கறதுக்கு வேற வேலை பாக்கலாம்!

நடிகை கஸ்தூரி நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தார் என நேற்று சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவியது. இதனை கஸ்தூரி மறுத்துள்ளார். மேலும் இந்த வதந்தியை பரப்பியவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் அவர்.


 
 
நடிகை கஸ்தூரி நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அவர் கலந்து கொண்டு பேசிய கருத்தரங்கை நாம் தமிழர் கட்சி ஒழுங்குபடுத்தி இருந்ததால் கஸ்தூரி நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து விட்டார் என இணையதளங்களில் செய்தி பரவியது.

 
இதனை கஸ்தூரி மறுத்துள்ளார். மேலும் இதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். வதந்தி தொடர்பான ஸ்க்ரீன் ஷாட் புகைப்படத்தை தனது டுவிட்டர் கணக்கில் பதிவேற்றி அதில் இப்படி பொய்யாக எழுதி காண்ட்ரோவெர்ஸி பண்ணி பொழைக்கறதுக்கு வேற வேலை பாக்கலாம். நான் பேசியது கருத்தரங்க மேடை, கட்சி கூட்டமல்ல என கூறியுள்ளார்.