புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (17:21 IST)

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம்- விவசாய சங்கத்தினர் பேட்டி

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, டெல்லியில்தான் அதிக நாள் உள்ளார். ஏன் ? ராகுல்காந்தியிடம் எடுத்துக் கூறி தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டியது தானே என்று கரூரில் அனைத்து விவசாய சங்கங்கள் கேள்வி எழுப்பினர்.



கரூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன், காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் காந்திபித்தன் உள்ளிட்ட இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி நிர்வாகிகள், வாழை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் என்று 25 விவசாய சங்க பிரதிநிதிகள் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன், 12 ஆண்டுகளாக காவிரி விவகாரம் பிரச்சினையை மத்திய அரசின் பட்ஜெட்டில் இடம்பெறாமல் இருந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலையீட்டினால், அந்த கெஜெட்டில் இடம்பெற்றுள்ளது. அதற்காக அ.தி.மு.க கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு தெரிவித்ததோடு, கர்நாடகா மாநிலத்தில், அங்குள்ள முதல்வர் குமாரசாமி காவிரி நீரை தரமாட்டேன் என்கின்றார். ஆனால் அவர்களுடன் காங்கிரஸ்  கூட்டணி வைத்துக் கொண்டு, இங்கு அதே காங்கிரஸ் கூட்டணிக்கு நாங்கள் (விவசாயிகள்) எப்படி வாக்களிக்க முடியும்,

அதே நேரத்தில், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி டெல்லியில் தான் அதிக நாட்கள் உள்ளார். அந்த நிலையில் ஏன் ? காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் காவிரி விவகாரத்தினை சொல்லி தீர்வு காணவில்லை. மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஒரு மண்புழு என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகின்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். விவசாயிகளுக்கு நண்பன், விவசாயிகளுக்கு நன்மை செய்வது தான் மண்புழு என்றார்.

இதனை தொடர்ந்து காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் காந்திபித்தன், கடந்த 14 வருடங்களாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து காவிரிக்காக போராடியவன் நான் என்றதோடு, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம் என்றார்.

சி.ஆனந்தகுமார்