வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2019 (13:01 IST)

பொன்னாரும் வசந்தகுமாரும் நேருக்கு நேர் – கன்னியாகுமரியில் ருசிகர சம்பவம் !

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்தித்து கைகொடுத்து கொண்டனர்.

கன்னியாகுமரி தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கும் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு காங்கிர்ஸ், பாஜக நேரடி மோதலில் ஈடுபட இருக்கிறது. இருக்கட்சி வேட்பாளர்களும் கன்னியாகுமரி தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

நாகர் கோவில் பகுதியில் உள்ள அண்ணா சிலை வசந்தகுமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதி முழுவதும் அதிமுக கொடிகள் தோரனங்கள் கட்டுப்பட்டுள்ளதைக் கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். (திமுக மற்றும் காங்கிரஸ் கொடிகளைக் கட்ட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது) இதையறிந்த அதிமுக மற்றும் பாஜக தொண்டர்களும் அந்தப்பகுதிக்கு வர பரபரப்பான சூழல் உருவானது. இதனால் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு உருவாகுமோ என்ற அச்சம் உருவானது.

இந்நிலையில் அருகில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பொன் ராதாகிருஷ்ணன் அங்கு வந்து தொண்டர்களை அமைதியாக இருக்கும்படி கூறினார். அதன் பின்னர் சக போட்டியாளரான வசந்தகுமாரின் வாகனம் அருகே சென்று அவரிடம் கைகொடுத்து சில நிமிடங்கள் பேசிவிட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கிருந்த அசாதாரணமான சூழல் சரியானது.