நீட் தேர்வு குறித்து சூர்யாவுடன் பொது விவாதத்திற்கு தயார்: கரு நாகராஜன்

Surya
நீட் தேர்வு குறித்து சூர்யாவுடன் பொது விவாதத்திற்கு தயார்: கரு நாகராஜன்
siva| Last Updated: திங்கள், 5 ஜூலை 2021 (15:35 IST)
நீட் தேர்வு குறித்து சூர்யாவுடன் பொது விவாதம் நடத்த தயார் என பாஜக பொதுச்செயலாளர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளர்
நீட்தேர்வு. புதிய கல்விக் கொள்கை, புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக சூர்யா குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் நீட்தேர்வு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த கரு நாகராஜன் நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவுடன் பொது விவாதம் நடத்த தயார் என்று கூறியுள்ளார்
அதேபோல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்தில் மட்டுமே நீட் தேர்வை எதிர்த்து எதிர்த்து வருகின்றனர் என்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் கம்யூனிஸ்டு ஆளும் மாநிலங்களிலும் இந்த எதிர்ப்பு இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

நீட் தேர்வில் தாக்கம் குறித்து ஆராயும் அரசாணைக்கு எதிராக பாஜகவின் வழக்கு சட்டபூர்வமான போராட்டம் என்றும் அவர் தெரிவித்தார்இதில் மேலும் படிக்கவும் :