திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 ஜூலை 2021 (15:59 IST)

தயாரிப்பாளராக கடமையை ஆற்றிய சூர்யா? குவியும் பாராட்டுகள்!

நடிகர் சூர்யா தான் தயாரிக்கும் படங்களில் பணியாற்றுபவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

நடிகர் சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலமாக் இப்போது இரண்டு படங்களைத் தயாரித்து வருகிறார். அதில் ஒன்றில் அவரும் நடிக்கிறார். இந்நிலையில் கொரோனா தளர்வுகளுக்குப் பின்னர் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தனது தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகும் படங்களில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளாராம். தடுப்பூசி போட்ட பின்னரே படப்பிடிப்புகளில் அனைவரும் கலந்துகொள்ள முடியும் என முடிவெடுத்துள்ளாராம். இந்த முடிவை திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.