வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (19:36 IST)

சூர்யா பிறந்தநாளில் ….ரசிகர்களுக்கு அதிரடி விருந்து !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா.  இவர் தனது பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து வைக்க உள்ளார்.

 சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வரும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக ஷூட்டிங் தள்ளிபோனது. தற்போது அரசு விதித்துள்ள வழிமுறைகளின்படி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  சூர்யா40 படத்தின் 40 % ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில்   வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாள் அன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதை பெரிய அளவில் கொண்டாட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.